\
கால் தவறி விழுந்த மூதாட்டி.. நொடி நேரத்தில் ஏறிய அரசுப் பேருந்து..! - சிசிடிவி

கால் தவறி விழுந்த மூதாட்டி.. நொடி நேரத்தில் ஏறிய அரசுப் பேருந்து..! - சிசிடிவி

கால் தவறி விழுந்த மூதாட்டி.. நொடி நேரத்தில் ஏறிய அரசுப் பேருந்து..! - சிசிடிவி
Published on

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் கால் தவறி விழுந்த மூதாட்டி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து, திருவொற்றியூர் நோக்கிச் செல்லும் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து மெதுவாக வெளியே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து நிலைய நடைமேடை படிக்கட்டு வழியாக கடந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கால் தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பேருந்தின் பின் சக்கரம் மூதாட்டியின் தலையின் மீது ஏறியது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக மூதாட்டி இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து போன மூதாட்டியின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநர் வெங்கடேசன்(45), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com