திருத்தணியில் கடும் வறட்சி... முன்னாள் மாணவர்கள் சார்பில் குடிநீர் விநியோகம்

திருத்தணியில் கடும் வறட்சி... முன்னாள் மாணவர்கள் சார்பில் குடிநீர் விநியோகம்

திருத்தணியில் கடும் வறட்சி... முன்னாள் மாணவர்கள் சார்பில் குடிநீர் விநியோகம்
Published on

திருத்தணி நகரில் நிலவும் கடும் குடிநீர் வறட்சியால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1992 ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்களில் பலர்  உயர்க் கல்வி கற்று  உள்நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலும் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். பள்ளி நண்பர்கள் ‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சி மூலம் சுமார் கால் நூற்றாண்டுக்கு பிறகு சமீபத்தில் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

படித்த பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கல்விக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். இந்நிலையில் கோடையில் கடும் வறட்சி ஏற்பட்டு திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகின்றது. குடம் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில் வாட்ஸ் அப் குழு மற்றும் ஃபேஸ்புக் வாயிலாக முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, பணம் வசூல் செய்து தினமும் 2 டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். நகராட்சி முழுவதும் 21 வார்டுகளிலும் குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. முன்னாள் மாணவர்களின் குடிநீர் வழங்கும் சேவை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com