Old manpt desk
தமிழ்நாடு
தென்காசி: தண்ணீர் இல்லாத 60அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு
விவசாய பணியின் போது 60அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவரை விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: டேவிட்
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த மாடசாமி (72) என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர், விவசாய பணிகளை முடித்து விட்டு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 60அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழந்துள்ளார். கிணற்றில் தவறி விழுந்த மாடசாமி சத்தம் எழுப்பவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
Old man rescuedpt desk
தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் விழுந்தவரை விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.