இறைச்சி வாங்க சென்ற முதியவருக்கு கொரோனா

இறைச்சி வாங்க சென்ற முதியவருக்கு கொரோனா
இறைச்சி வாங்க சென்ற முதியவருக்கு கொரோனா

சென்னை ஆட்டுத்தொட்டியில் இறைச்சி வாங்க சென்ற முதியவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாளுக்கு நாளிகளில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், கோயம்பேடு மார்க்கெட் ஊழியர்கள் என பலருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை ஆட்டுத்தொட்டி பகுதியில் இறைச்சி வாங்க சென்ற முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ,ஆட்டுத்தொட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன் இறைச்சி வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, கடந்த வாரம் ஆட்டுத்தொட்டி இறைச்சிக் கூடம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கீழக்கரை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவரை மண்ணடி பகுதியில் ஆட்டோவில் ஏற்றிச் சென்ற, ஆட்டோ ஓட்டுனருக்கு ஒரு மாதத்திற்கு பின் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com