\
மதுரை: வீட்டின் முன்பு நின்றவரை முட்டித்தள்ளிய காளை; சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு

மதுரை: வீட்டின் முன்பு நின்றவரை முட்டித்தள்ளிய காளை; சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு

மதுரை: வீட்டின் முன்பு நின்றவரை முட்டித்தள்ளிய காளை; சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு
Published on

மேலூர் அருகே மாடு முட்டியதில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் பெரியபுலியன் (80). இவர் தனது வீட்டின் முன்பு நின்றிருந்த போது காளை ஒன்று திடீரென அவரை முட்டிவிட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். இதனையடுத்து மேலவளவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு முட்டி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com