தமிழ்நாடு
மருந்துக்கடை சென்ற முதியவர் வலிப்பால் மரணம் : கொரோனா என பரவும் வதந்தி
மருந்துக்கடை சென்ற முதியவர் வலிப்பால் மரணம் : கொரோனா என பரவும் வதந்தி
மதுரையில் மருந்து கடைக்கு சென்ற முதியவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஜெகநாதன். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள மருந்து கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் முதியவர் ஜெகநாதன் நடந்து வருவதும், மயங்கி விழுந்ததும், அத்துடன் உயிரிழந்த காட்சிகளும் பதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பிய சில, ‘கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் வைரஸ் தொற்று முற்றியாதல் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்’ என வதந்தி பரப்பியுள்ளனர். இந்த பொய்யான தகவல் வேகமாக பரவி வருகிறது.