திருமங்கலம் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

திருமங்கலம் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

திருமங்கலம் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
Published on

திருமங்கலத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் குருசாமி(53). இவர் தனது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தையின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் குருசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com