வாவ்! என்னா ஒரு ஸ்டெப்.. அசத்தலாக நடனமாடிய மூதாட்டி! களைகட்டிய சிவகாசி ’ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி!

சிவகாசியில் அரசின் சார்பாக போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மகிழ்ச்சி தெருக்கள்’ நிகழ்ச்சியானது நடைப்பெற்றது.

சிவகாசியில் அரசின் சார்பாக போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ’மகிழ்ச்சி தெருக்கள்’ (Happy Streets) நிகழ்ச்சியானது நடைப்பெற்றது. கம்பம் ஏறுதல், இளவட்ட கல் தூக்குதல், யோகா பயிற்சி போன்றவற்றில் நூற்றுக்கணக்காணவர்கள் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் மூதாட்டி ஒருவர் அங்கு ஒலிக்கப்பட்ட இசைக்கு ஏற்ப நடனமாடியது பார்பவர்களை வியக்க வைத்தது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட கண்காணிப்பு ஆய்வாளர் ஸ்ரீநிவாச பெருமாள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com