‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்

‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்

‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்
Published on

பட்டுக்கோட்டையில் மூதாட்டியின் உயிரை ‘நண்பன்’ பட பாணியில் இளைஞர்கள் காப்பாற்றியுள்ளனர். 

காசாங்குளத்தின் சிவன் கோயிலில் பிச்சை எடுத்து வரும் சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி எதிர்பாராத விதமாக கோயில் குளத்தில் விழுந்துள்ளார். இதை கவனித்த இளைஞர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், மீட்கப்பட்ட மூதாட்டி உயிருக்குப்‌ போராடியுள்ளார். 

அதனால், தீயணைப்பு வாகனம் வரும் வரை இளைஞர்கள் காத்திருக்கவில்லை. துரிதமாக செயல்பட்ட இளைஞர்கள், நண்பன் படத்தில் வரும் காட்சியைப் போல் இரு சக்கர வாகனத்தில் மூதாட்டியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். போகும் வழியெங்கும் வழிவிடுங்கள்.. வழிவிடுங்கள் என குரல் எழுப்பிக் கொண்டே சென்றனர். வேகமாக சென்று மருத்துவமனையில் அந்த மூதாட்டியை சேர்த்தனர். 

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளே வரை இளைஞர்கள் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர். சாமர்த்தியத்துடன் செயல்பட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இளைஞர்களின் வேகமான செயல்பாட்டால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com