கோவை: குப்பைக் கிடங்கில் சரிந்த மொத்த குப்பை... குப்பை அள்ளிக்கொண்டிருந்த மூதாட்டி பலி

கோவை: குப்பைக் கிடங்கில் சரிந்த மொத்த குப்பை... குப்பை அள்ளிக்கொண்டிருந்த மூதாட்டி பலி
கோவை: குப்பைக் கிடங்கில் சரிந்த மொத்த குப்பை... குப்பை அள்ளிக்கொண்டிருந்த மூதாட்டி பலி

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் லாரியில் இருந்து குப்பை கொட்டும்போது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியொருவர் குப்பையில் புதைந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பணியாளர்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான லாரிகளில் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நாள்தோறும் கொட்டப்படுவது வழக்கம். அப்படி இன்று குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துக் கொண்டிருந்த மூதாட்டியொருவர் மீது, லாரியில் இருந்த குப்பை மொத்தமாக கொட்டப்பட்டுள்ளது. இதில் அந்த மூதாட்டி குப்பையில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தனியார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 70 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பிளாஸ்டிக் மற்றும் தொட்டிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக லாரியில் குப்பையை கொட்டியபோது, எதிர்பாராவிதமாக மூதாட்டி மீது குப்பை முழுவதுமாக விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தொடர்ந்து சக ஊழியர்கள் தகவல் தெரிவித்தன் அடிப்படையில் குப்பையிலிருந்து மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com