\
நாகையில் விவசாய தம்பதியினர் தற்கொலை : வறுமை காரணமா ? ?

நாகையில் விவசாய தம்பதியினர் தற்கொலை : வறுமை காரணமா ? ?

நாகையில் விவசாய தம்பதியினர் தற்கொலை : வறுமை காரணமா ? ?
Published on

நாகை அருகே விவசாய தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த பெரிய வடக்குவெளி பகுதியை சேர்ந்த விவசாய தம்பதியினர் துரைசாமி- நாகம்மாள். இவர்களது மகளும், மகனும் வெளியூரில் வசித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடந்த ஒரு மாத காலமாக இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் காலை விடிந்த பின்னர் நீண்ட நேரம் ஆகியும் துரைசாமியின் வீடு பூட்டியே கிடந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கதினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே துரைசாமி, நாகம்மாள் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இருவரது சடலத்தையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது தற்கொலைக்கு ஊரடங்கால் வீட்டில் தனிமையில் இருந்தது காரணமா ? அல்லது வறுமை காரணமா ? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com