சென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி

சென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி

சென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி
Published on

சென்னை திருவான்மியூரில் பழமையான கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் 140க்கும் மேற்பட்ட கார்களும், 50க்கும் மேற்பட்ட இருசக்கர ‌வா‌கனங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. 7‌0 ஆண்டுகள் பழமையான கார்கள் நன்கு பராமரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்க‌ப்பட்டிருந்தன. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பயன்படுத்திய டாட்ஜ் கிங்ஸ்வே கார், ஏவிஎம் திரைப்பட நிறுவன அதிபர் ஏ. வி. மெய்யப்பனின் வாக்ஸால் கார், ஜெமினி திரைப்பட நிறுவன அதிபர் எஸ்எஸ் வாசன் பயன்படுத்திய வாக்ஸால் வெலாக்ஸ் கார் போன்றவை மக்களை அதிகளவு ஈர்த்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரேவதி, கார்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கண்காட்சி அமைந்திருந்ததாகக் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com