\
பஸ் பாஸ்
பஸ் பாஸ்முகநூல்

புதிய பஸ் பாஸ் வழங்கும்வரை, பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாமா? போக்குவரத்து துறை விளக்கம்!

புதிய பஸ் பாஸ் வழங்கும்வரை, பழைய பஸ் பாஸை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Published on

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய மாணவர் சேர்க்கையை தொடர்ந்து ஒட்டுமொத்தமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு, மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து கழகம்
போக்குவரத்து கழகம்புதிய தலைமுறை

அதுவரை மாணவர்கள் தங்களின் பள்ளி அடையாள அட்டை மற்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை பயன்படுத்தி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஸ் பாஸ்
“ஜூன் 2ஆம் தேதி வரை இதே நிலைதான்” - வெயில் தொடர்பாக வானிலை ஆய்வு மையம்

அதேசமயம், மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com