ஒகி பாதிப்பால் குமரியில் களையிழந்த கிறிஸ்துமஸ்

ஒகி பாதிப்பால் குமரியில் களையிழந்த கிறிஸ்துமஸ்
ஒகி பாதிப்பால் குமரியில் களையிழந்த கிறிஸ்துமஸ்

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்கள் பலர் கரை திரும்பாததை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குமரி மாவட்டம் தூத்தூர் ‌பகுதி மக்கள் காணாமல் போன மீனவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். மீனவர்கள் கரை திரும்பாததால், வழக்கமான உற்சாகம் இன்றி சோகத்துடன் நள்ளிரவு பிரார்த்தனையில் ஏசு கிறிஸ்துவை வழிபட்டனர்.

தூத்தூரில்‌ பிரார்த்தனையை முடித்த 8 மீனவ கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அந்தந்த ஊர்களில் உயிரிழந்தவர்கள் குறித்து வைக்கப்பட்ட பேனர்கள் முன் நின்று அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பல கிராமங்களில் மக்கள் கிறிஸ்துமஸை கொண்டாடாமல் தவிர்த்துவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com