தீபாவளியை முன்னிட்டு ரூ.464 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட கலெக்‌ஷன் அமோகம்

தீபாவளியை முன்னிட்டு ரூ.464 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட கலெக்‌ஷன் அமோகம்
தீபாவளியை முன்னிட்டு ரூ.464 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட கலெக்‌ஷன் அமோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் 464 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் தேதி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்ததாக திருச்சி மண்டலத்தில் 41  கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும் கோவை மண்டலத்தில் 39 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.  மேலும் சென்னை மண்டலத்தில் 38 கோடி ரூபாய் என மொத்தமாக 205  கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

இதே போல தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில், அதிகபட்சமாக மதுரையில் 55 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே போல சேலம் மண்டலத்தில் 52 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 51 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில்-50 கோடி ரூபாய்க்கும்,   கோவை மண்டலத்தில் 48  கோடி ரூபாய்  என 258  கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 33 கோடி ரூபாய்க்கு அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: கோவை கார் வெடிப்பு: ஜமேஷா முபீனுடன் இருந்த அந்த 4 பேர் யார்..? - போலீசார் தீவிர விசாரணை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com