மளிகை கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகள்! அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே மளிகை கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
eggs
eggspt desk

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் தமிழக அரசின் முத்திரையுடன்கூடிய சத்துணவு முட்டைகள் சில, குமாரபாளையம் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்துள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

govt school
govt schoolpt desk

அதில் ஆறு அட்டைகள் வரை கொண்ட 180 முட்டைகள் அந்தக் கடையில் உள்ளன. வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புகார் வந்ததின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புகாரில் உண்மைத்தன்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com