வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்த 150 மாணவர்கள்! ஒசூரில் நடந்தது என்ன?

வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்த 150 மாணவர்கள்! ஒசூரில் நடந்தது என்ன?
வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்த 150 மாணவர்கள்! ஒசூரில் நடந்தது என்ன?

ஓசூர் மாநகராட்சியின் நடுநிலைப்பள்ளியில் விஷவாயு தாக்கியதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்தனர். இதுகுறித்து விசாரிக்கப்படும் என ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1300 பேர் பயின்று வருகின்றனர். இங்கு மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டு பள்ளி மாணாக்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் 2 மணி அளவில் பள்ளி அறைக்குள் சென்றதாகவும், சற்றுநேரம் கழித்து நடுநிலைப் பள்ளியின் 6-வது மற்றும் 7-வது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாய்வு தாக்கி கண்பார்வை மங்கலாகவும், ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்தடுத்து ஒருவருக்கு பின் ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழ தொடங்கியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸ் வரவைத்து அதன் மூலமாக பள்ளி மாணவர்களை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், சக்தி என்ற மாணவனின் பல்ஸ் குறைந்து வருவதால் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஸ்வேதா என்ற மாணவி மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு நகர காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத் துறையினர், மாசுகட்டுப்படு வாரியம், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் வானவர் ரெட்டி செய்தியாளரிடம் சந்திப்பதில், ’’இந்த நிகழ்வு நடந்ததாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் பள்ளியில் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளோம். மேலும் இந்த சம்பவத்திற்கு முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்தக் காரணத்தை கண்டறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை இன்று அல்லது நாளை கிடைத்தவுடன் முழு விவரம் தெரிய வரும்’’ என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் மாணவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பதறி அடித்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் பரபரப்பாக நிலவவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com