வீடூர் அணையில் கையோடு பெயர்ந்துவந்த தார் சாலை: செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

வீடூர் அணையில் கையோடு பெயர்ந்துவந்த தார் சாலை: செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!
வீடூர் அணையில் கையோடு பெயர்ந்துவந்த தார் சாலை: செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் தரை மீது போடப்பட்ட தார் சாலை தரமற்றதாக உள்ளதாக பொதுமக்கள் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் அணையில் பராமரிப்புப் பணி 43 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பில் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் வீடூர் அணையை சுற்றியுள்ள ஆத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று தார் சாலை தரமற்று உள்ளதாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டனர்.

பொதுமக்களின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வீடூர் அணையின் உதவி செயற்பொறியாளர் ரமேஷிடம் கேட்டபோது, "பணி ஆணையின் படி 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 செ.மீ. உயரத்தில் மூன்றே முக்கால் அடி அகலத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தார் சாலை இறுகும் தன்மை அடையும் முன்பே சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சாலையை பெயர்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அணையில் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த பணி அணையின் படி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது" என்றார்

மேலும் இதுகுறித்து ஏற்கனவே புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் அதன் எதிரொலியாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாலை பணியினை தரமுடன் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்தார்.

அதேபோல கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக பெற்றுக் கொண்ட அவர், “இது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை அல்ல, அதிகாரிகள் ஆய்வுக்காக போடப்படும் சாலை” என்று பொதுமக்களுக்கு விளக்கமும் அளித்தார். இதனை அடுத்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு வாரத்திற்குள்ளாக இந்த பணிகள் நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com