\
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
Published on

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவிற்கு பிறகு அவரது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவரது அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்களை பராமரிப்பது குறித்து அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com