”வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்” - 85 வயது மூதாட்டியின் குறையை தீர்த்துவைத்த அலுவலர்!

”வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்” - 85 வயது மூதாட்டியின் குறையை தீர்த்துவைத்த அலுவலர்!
”வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்” - 85 வயது மூதாட்டியின் குறையை தீர்த்துவைத்த அலுவலர்!

வீட்டை அபகரிக்க முயல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் ஒவ்வொரு அலுவலகமாக நான்கு கால் ஊன்றுகோல் உதவியுடன் 85 வயதில் அலைந்து திரிந்த மூதாட்டிக்கு கடைசியாக உதவி கிடைத்திருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். 85 வயதான இந்த மூதாட்டியின் வீட்டை அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் அபகரிக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. இவரது கணவர் மற்றும் மகன் இறந்துவிட இவரது இரு மகள்களும் திருமணமாகி கும்பகோணம் அருகே வசித்து வருகின்றனர். இவரது கணவர் பெயரிலான சுமார் 1200 சதுர அடியில் ஒரு சிறிய கூரை வீட்டில் வசித்துவருகிறார் மூதாட்டி. அந்த இடத்தை அருகில் உள்ள சிலர் ஆக்ரமிக்க முயல்வதாகவும் தன்மீது தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம்சாட்டுகிறார் அவர்.

முதுமை காரணமாக நடக்க முடியாத நிலையில் மேலும் கால்கள் ஒடிந்து அதற்கு வைத்தியம் பார்த்துக்கொண்டு, நாற்காலி போன்ற ஊன்றுகோல் உதவியுடன் தட்டுத்தடுமாறி வாரம்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்து வருகிறார்.

அவரை தாலுகா அலுவலகம் சென்று பார்க்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். அதன்படி தாலுகா, அலுவலகம் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்று மீண்டும் மயிலாடுதுறையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து புகார் அளித்தார். இன்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் திருபுவனத்தில் உள்ள அரவது மகள் வழி பேத்தி அமுதாவை வரசெய்து அவருடன் செல்ல அறிவுறுத்திய நிலையில் தான் இருக்கும் இடத்திலேயே பிரச்னை இல்லாமல் வசிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

மேலும் கோவிந்தம்மாளிடம் தகராறு செய்பவர்கள்மீது குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களை கைதுசெய்யவேண்டும் என்றும், பாட்டி தன் பூர்வீக இடத்தில் வசிக்க ஆவன செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தார். கோவிந்தம்மாளின் பேத்தி அமுதாவும் தன் பாட்டி குடியிருக்க குடிசை அமைத்துத்தருகிறோம் என்று உறுதியளித்து அழைத்துச் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com