ஆதீனம் கடத்தலா? - நித்யானந்தா சீடர்களிடம் அதிகாரிகள் விசாரணை

ஆதீனம் கடத்தலா? - நித்யானந்தா சீடர்களிடம் அதிகாரிகள் விசாரணை

ஆதீனம் கடத்தலா? - நித்யானந்தா சீடர்களிடம் அதிகாரிகள் விசாரணை
Published on


காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடத்தின் மடாதிபதி காணாமல் போன விவகாரம் குறித்து நித்யானந்தா சீடர்களிடம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புடைய சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக ஞானபிரகாச மடத்தில் தங்கி வரும் நித்யானந்தாவின் சீடர்கள் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த சிவலிங்க பூஜையை மாற்றினர். இதனிடையே திடீரென மடாதிபதியும் காணாமல் போனதால் அவரை நித்தியானந்தாவின் சீடர்கள் கடத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின. மடத்தில் ஆதீனம் இல்லாததால் சந்தேகம் அடைந்த தொண்டை மண்டல முதலியார்கள் சங்க அமைப்பினர், இது பற்றி சிவ காஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையிலான குழுவும் நித்யானந்தா சீடர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com