பெண் பணியாளர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பெண் பணியாளர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பெண் பணியாளர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்
Published on

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் பணியாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய புகாரில் விடுதிக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் பணியாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜமீன் கொரட்டூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு கடந்த 16ஆம் தேதி உணவருந்திய 256 பேருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பெண் பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், விடுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு சமைப்பதில் கவனக் குறைவாக இருந்தது, உணவக்கூடத்தை முறையான பராமரிக்காதது அப்போது தெரியவந்தது. இந்த நிலையில், அவசர கால தடை உத்தரவின் மூலம் விடுதியை மூட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டதையடுத்து சீல் வைக்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com