\
மதுரை மத்திய சிறையில் அதிகாரிகள் சோதனை

மதுரை மத்திய சிறையில் அதிகாரிகள் சோதனை

மதுரை மத்திய சிறையில் அதிகாரிகள் சோதனை
Published on: 

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டிருக்கிறதா என சிறைத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில்‌ ஈ‌டுபட்டனர்.

சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி செய்து தரப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பிற சிறை‌ச் சாலைகளில் சோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே சேலம், கோவை, கடலூர் மற்றும் நெல்லை சிறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் துணை ஆணையர் அருண் கோபால கிருஷ்ணன் தலைமையில்‌ சிறைத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணியிலிருந்து சுமார் 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் சிறிய ஆணித் துண்டுகள் மற்றும் பிளேடுகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com