லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர்...மாட்டிவிட்ட விவசாயி
நாகர்கோவில் அருகே மணல் எடுக்க லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிவிட்டார் விவசாயி பாபு என்பவர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருவாய் ஆய்வாளராக இருந்து வருகிறார் ஆனந்த் சதீஷ். உரிய அரசு அனுமதியுடன் குளத்தில் மணல் எடுத்த பாபு என்ற விவசாயியை பிடித்து, லோடுக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். பணம் தருவதாக கூறி நாகர்கோவிலில் பிரதானமான மக்கள் நெருக்கடி மிகுந்த நீதிமன்ற சாலைக்கு ஆய்வாளரை வரச் சொல்லியிருக்கிறார் விவசாயி பாபு. இந்த தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும் சொல்லியிருக்கிறார் பாபு. முதல் தவணையாக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகப் பெற முயன்ற போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய் ஆய்வாரை கையும் களவுமாக பிடித்தனர். தவறை தட்டிக்கேட்க வேண்டிய அரசு அதிகாரியே லஞ்சம் பெற்று மாட்டி கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.