\
ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கவும்: ஓபிஎஸ்

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கவும்: ஓபிஎஸ்

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கவும்: ஓபிஎஸ்
Published on

நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை, உடனடியாக விரைந்து வழங்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு இந்த மாத ஊதியத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாய விலைக் கடை ஊழியர்கள் மத்தியில் நிலவுவதாகவும், இதனால் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களாக எந்த ஊதிய உயர்வையும் பெறாமல், நியாய விலைக் கடை ஊழியர்கள், பணியை மட்டும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com