HEADLINES |திடீர் ஆய்வில் இறங்கிய முதல்வர் முதல் தவெகவினரின் மனு மீதான விசாரணை வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில், திடீர் ஆய்வில் இறங்கிய முதல்வர் முதல் தவெகவினரின் மனு மீதான விசாரணை வரை விவரிக்கிறது.
மக்களைப் புறக்கணிக்கும் அரசாங்கம், அவர்களது கோபத்திற்கு ஆளாக நேரிடும்... நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு...
கோழைத்தனமே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் மையக்கருத்து என ராகுல் காந்தி விமர்சனம்... ஜனநாயகத்தின் மீதான தாக்குதலே நாடு எதிர்கொண்டுள்ள சவால் எனவும் கருத்து...
ராமநாதபுரம் செல்லும் வழியில் திடீர் ஆய்வில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்... மானாமதுரை அருகே 120 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தின் சீரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆர்எஸ்எஸ் பிடியில் விஜய் இருப்பதாக திருமாவளவன் விமர்சனம்... விஜயை கையில் எடுத்துள்ளவர்கள் ஆபத்தானவர்கள் என புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி..
ஆட்சியாளர்களுக்கு தூபம் போடுவதை திருமாவளவன் விட்டுவிட வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தல்... விசிகவினருக்கும் ஒருநாள் இப்படிப்பட்ட நிலை வரும் என்றும் பேச்சு...
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை... திரைப்பட வசனம்போல இருப்பதாகவும், இது நல்ல அணுகுமுறை அல்ல என்றும் சீமான் கருத்து...
தவெக பொதுச் செயலர் ஆனந்த், இணை பொதுச் செயலர் நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனுக்கள் இன்று விசாரணை... தவெகவுக்கு தடை கோரும் மனுவையும் இன்று விசாரிக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலத்தில் இன்று கனமழை... 5ஆம் தேதி வரை சென்னையிலும் மழை தொடரும் என வானிலை மையம் கணிப்பு...
காஸா மக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அவசரஅவசரமாக வெளியேறி வருகின்றனர்.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான வந்தே பாரத் ரயில்களை இயக்கும் மாநிலங்களின் பட்டியலில், மஹாராஷ்ட்ராவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது பீகார்.