விளை நிலங்களில் தேங்கும் மழைநீர்: அழுகும் நிலையில் சம்பா பயிர்

விளை நிலங்களில் தேங்கும் மழைநீர்: அழுகும் நிலையில் சம்பா பயிர்

விளை நிலங்களில் தேங்கும் மழைநீர்: அழுகும் நிலையில் சம்பா பயிர்
Published on

திருவாரூர் மாவட்டத்தில் விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ‌ஈடுபட்டனர்.

திருவாரூர் ‌- மன்னார்குடி சாலையிலுள்ள கமலாபுரம் என்ற இடத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்‌. சேந்தங்குடி, மாவட்டக்குடி, குலமாணிக்கம், அன்னுக்குடி, புத்தகரம், காரியமங்கலம் உள்ளிட்ட 25க்கும் அதிகமான கிராமங்களில் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைவிட்டு 4 நாட்களாகியும் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்‌‌கவில்லை விவசாயிகள் குற்றம்‌சாட்டுகின்ற‌னர். மழைநீர் தேங்கியுள்ளதால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான‌‌ ஏக்கரில் சம்பா பயிர் அழுகும் நிலையிலுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com