ஒகி புயலால் பாதிப்பு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ஒகி புயலால் பாதிப்பு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ஒகி புயலால் பாதிப்பு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் காரணமாக சூறைக்காற்றுடன் நேற்று கனமழை பெய்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் கிராமச் சாலைகளிலும் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. சூறைக்காற்று காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளின் மீதும் மரங்கள் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி நேற்று 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்றும் ஒகி புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே பரளியாறு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் விமல் என்கிற 27 வயது இளைஞர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஒகி புயலால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com