சுகாதாரத்துறையில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி: முதல்வர் பழனிசாமி

சுகாதாரத்துறையில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி: முதல்வர் பழனிசாமி

சுகாதாரத்துறையில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி: முதல்வர் பழனிசாமி
Published on

இந்தியாவிலேயே உயரிய மருத்துவ சேவை பெறும் இடமாகத் தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ‌தலைமை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேடையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கடந்த ஆறு ஆண்டுகளில் சுகாதாரத்துறைக்கு 51 ஆயிரத்து 66 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சுகாதாரத்துறையின் இலக்கை அடைவதில் தமிழகம் முன்னிலை வகிப்பதாகக் கூறினார். மேலும், தாய்மார்கள், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் மற்றும் தேசிய இலக்கை அடைவதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com