\
மக்களின் மனதில் தோனி என்றுமே கேப்டன் கூல் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மக்களின் மனதில் தோனி என்றுமே கேப்டன் கூல் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மக்களின் மனதில் தோனி என்றுமே கேப்டன் கூல் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
Published on

மக்களின் மனதில் என்றுமே கேப்டன் கூலாக தோனி நிலைத்திருப்பார் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவரது ஓய்வு முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் கிரிக்கெட்டின் ஆழ்ந்த உணர்வுகளின் மூலம் கிரிக்கெட்டின் வெற்றிமுனைக்கு இந்தியாவை தோனி கொண்டு வந்துள்ளார். அவருடைய நிதானம் பல பாதகமான சூழ்நிலைகளை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி தந்துள்ளது. அவர் மக்களின் மனதில் என்றுமே கேப்டன் கூலாக நிலைத்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com