\
ஜெயலலிதாவின் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
Published on: 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் ஆதரவு தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செயற்கையான குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சில தகவல்களை வெளியிட வேண்டி வரும் என்று தெரிவித்தார்.

கட்சி, ஆட்சிப் பொறுப்புக்கு வர மாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் கொடுத்த சசிகலா, தற்போது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றி குடும்ப சொத்தாக மாற்றுவதற்காக கபட நாடகம் ஆடுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று கூறிய பன்னீர்செல்வம், அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com