“புளியோதரை எப்படி இருந்ததோ... அப்படித்தான்” - அதிமுக மாநாட்டை விமர்சித்த ஓபிஎஸ்!

அதிமுக மாநாடு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

விமானம் மூலம் சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை விமான நிலையம் சென்றடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ‘அதிமுகவை வைத்து பாஜக தமிழ்நாட்டில் நுழைய பார்க்கிறது’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

ops
opspt web

அதற்குப் பதிலளித்த அவர், அதிமுகவின் மாநாடு குறித்த கேள்விக்கும் கிண்டலாகப் பதில் அளித்துவிட்டுச் சென்றார். ’மாநாடு எப்படி இருந்தது’ என்ற கேள்விக்கு அவர், ’புளியோதரை எப்படி இருந்ததோ, மாநாடும் அப்படியே இருந்தது’ எனப் பதிலளித்தார்.

முழு பேட்டியை, செய்தியில் இணைக்கப்படும் காணொளியில் பார்க்கலாம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com