\
ஓபிஎஸ்-க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

ஓபிஎஸ்-க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

ஓபிஎஸ்-க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
Published on

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க கோரியும் அவரது அணி சார்பில் உள்துறை அமைச்சகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க, அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பன்னீர் செல்வத்திற்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. துப்பாக்கி ஏந்திய 8 துணை ராணுவத்தினர் அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com