நம்பியவர்களைக் கைவிட்டாரா ஓபிஎஸ்? - ‘தர்மயுத்தம்’ எம்.பிக்கள் அதிருப்தி

நம்பியவர்களைக் கைவிட்டாரா ஓபிஎஸ்? - ‘தர்மயுத்தம்’ எம்.பிக்கள் அதிருப்தி
நம்பியவர்களைக் கைவிட்டாரா ஓபிஎஸ்? -  ‘தர்மயுத்தம்’ எம்.பிக்கள் அதிருப்தி

சசிகலா தலைமையை எதிர்த்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்து நின்று தர்மயுத்தம் நடத்திய அவரது ஆதரவு எம்.பி.க்கள் 10 பேரில் ஒருவருக்குக் கூட இந்தத் தேர்தலில் மீண்டும் 'சீட்' வழங்கப்படவில்லை.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததும், சசிகலா தலைமையை எதிர்த்து, ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது அவருக்கு பக்கபலமாக 10 எம்.பி.க்கள் நின்றனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், ஓ.பன்னீர் செல்வத்தை திரும்ப இணைத்துக் கொண்டார். இருவரும் ஒரணியில் நின்று இரட்டை இலை சின்னத்தையும் பெற்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் 37 எம்.பி.க்களில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 27 பேரில், தம்பிதுரை, டாக்டர் வேணுகோபால், டாக்டர் ஜெயவர்தன், மகேந்திரன், மரகதம் குமரவேல், செஞ்சி சேவல் ஏழுமலை ஆகிய 6 பேருக்கு மட்டுமே மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த சுந்தரம், அசோக்குமார், சத்தியபாமா, வனரோஜா, கோபாலகிருஷ்ணன், செங்குட்டுவன், மருதராஜா, ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி, பார்த்திபன் உள்ளிட்ட 10 பேரில் ஒருவருக்குக் கூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஏற்கெனவே தனது சகோதரருக்கு ஆவின் சேர்மன் பதவி வாங்கித் தந்த ஓபிஎஸ், தற்போது தனது மகனுக்கு சீட் கிடைத்தால் போதும் என்று, ஆதரவாளர்களை கைவிட்டு விட்டதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனினும், கிருஷ்ணகிரி தொகுதியில் கே.பி.முனுசாமிக்கு சீட் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டும் சிலர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கட்சியைக் காப்பாற்றும் பொறுப்பில் இருப்பதாக ஓபிஎஸ் தனது அணி எனப் பார்க்காமல் இருந்திருக்கலாம் என்ற மாற்றுக்கருத்தையும் சிலர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com