OPS
OPSpt desk

“தேர்தலுக்குப் பிறகு அதிமுக எங்கள் வசம் வரும்” - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை!

முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
Published on

செய்தியாளர்: அருளானந்தம்

தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னிர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

OPS
OPSpt desk

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசிய போது.... “2024 தேர்தல் முடிவில், அதிமுக எங்கள் வசம் வரும். பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்று கருத்து கணிப்புகள் வருகின்றன.

OPS
“கோவை தொகுதி வாக்காளர்களுக்கு பாஜக பணம் கொடுத்ததாக நிரூபித்தால்...” - அண்ணாமலை சவால்

ராமநாதபுரம் தொகுதியில் எனக்கு வெற்றி உறுதி. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எங்கு உள்ளார் என்று தெரியவில்லை” என்றார்.

தொடர்ந்து அவரிடம் ‘2024 தேர்தல் முடிவில் அதிமுக ஓபிஎஸ், டிடிவி தினகரன் கைக்கு வரும்’ என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக எங்கள் வசம் வரும்” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com