“எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த 8 தேர்தல்களிலும் தோல்வி” - ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி தலைமையில் அதிமுக சந்தித்த 8 தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளது என தருமபுரியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
ops
opsகோப்புப்படம்

செய்தியாளர் - சே.விவேகானந்தன்

தருமபுரியில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள், அதிமுகவை தொடங்கிய போது அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட, பொதுச் செயலாளர் ஆகலாம் என்ற வகையில், கட்சியின் விதிகளை உருவாக்கினார். இதை எடப்பாடி பழனிசாமி தவிடுபொடியாக்கி விட்டார்.

eps
epsfile

10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளரை முன்மொழிய வேண்டுமாம். கட்சியின் விதிகளை மாற்றி அமைத்துவிட்டு தங்கமணி, வேலுமணி, வீரமணி போன்றவர்களை வைத்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வந்துள்ளாார்.

கட்சியை தொண்டர்களை மீட்கவே இந்த மீட்புக் குழு. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

ops
“அதிமுகவில் உள்ள பல பிரிவுகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும்” - ஓபிஎஸ்

ஆனால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்து சந்தித்த எட்டு தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்துள்ளது” என குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெள்ளமண்டி நடராஜன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com