\
சென்னை அண்ணாசாலையில் செவிலியர்கள் சாலை மறியல்

சென்னை அண்ணாசாலையில் செவிலியர்கள் சாலை மறியல்

சென்னை அண்ணாசாலையில் செவிலியர்கள் சாலை மறியல்
Published on

சென்னை அண்ணாசாலையில் செவிலியர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செ‌ன்னை டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த போராட்டத்தை தொடங்கினர். தங்களின் உரிமைகளுக்காக போராட வந்‌துள்ளதாகவும், அற வழியில் போராடி உரிமைகளை மீட்டெடுப்போம் என அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். 

அத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பணியில் சேர்ந்த தங்களுக்கு இதுவரையிலும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறைகள் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் திடீரென, சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com