தமிழ்நாடு
திருவள்ளூர்: தவறான ஊசி போட்டதால் பிரசவித்த பெண் உயிரிழப்பு? செவிலியர் சஸ்பெண்ட்
திருவள்ளூர்: தவறான ஊசி போட்டதால் பிரசவித்த பெண் உயிரிழப்பு? செவிலியர் சஸ்பெண்ட்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், குழந்தை பிரசவித்த பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், சிகிச்சை அளித்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாலங்காடு அடுத்த சின்ன களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வனிதா என்கிற நிறைமாதக் கர்ப்பிணிப் பெண், மகப்பேறுக்காக கடந்த 22-ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அடுத்த 3 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில், மணிமாலா என்ற செவிலியர் taxim எனும் அலர்ஜி ஊசி போட்டதை அடுத்து சுய நினைவை இழந்து, மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, நடவடிக்கைக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் புகார் அளித்தனர். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் அரசி, செவிலியர் மணிமாலைவை பணியிடை நீக்கம் செய்தார்.