\
“மிகப்பெரிய தவறைசெய்துவிட்டு சாதாரணமாக இருக்கிறார்”-டாக்டர் மீது நர்ஸின் உறவினர்கள் புகார்

“மிகப்பெரிய தவறைசெய்துவிட்டு சாதாரணமாக இருக்கிறார்”-டாக்டர் மீது நர்ஸின் உறவினர்கள் புகார்

“மிகப்பெரிய தவறைசெய்துவிட்டு சாதாரணமாக இருக்கிறார்”-டாக்டர் மீது நர்ஸின் உறவினர்கள் புகார்
Published on

தூத்துக்குடி கோவில்பட்டியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலை புதூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவிலியர் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள முரளி மருத்துவமனையில் செவிலியராக கடந்த 20ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், மருத்துவர் முரளி, செவிலியர் பெண்ணுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் மருத்துவரின் மனைவியும் பெண் மருத்துவரான விமலா தேவியிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தாமல் ஒரு தலைப்பட்சமாக செவிலியர் பெண்ணை இழிவுபடுத்தி வெளியேற்றியுள்ளது.

இதனால், மனவேதனை அடைந்த பாதிக்கப்பட்ட செவிலியர் தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரி விசாரணை நடத்தி, மருத்துவர் முரளி மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த நிலையில், இதுவரை டாக்டர் முரளியை கைது செய்யவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், டாக்டர் முரளி மிகப்பெரிய தவறை செய்துவிட்டு சர்வ சாதாரணமாக வெளியில் நடமாடி வருகிறார். ஆகவே இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்களில் இருந்து பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com