நெல்லை கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்? மக்களிடம் கருத்துக்கேட்பு

நெல்லை கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்? மக்களிடம் கருத்துக்கேட்பு

நெல்லை கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்? மக்களிடம் கருத்துக்கேட்பு
Published on

நெல்லை கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 10-ல் மக்களிடம் கருத்து கேட்பு நடத்துகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டுவது என்கிற கேள்வி பல காலமாக நீடித்து வருகிறது. கூடங்குளம் அணு உலையிலிருந்து கிடைக்கும் அணுக்கழிவானது கோலார் தங்க வயலில் சேமிக்கப்படும் என்று ஒரு தகவல் எழுந்தது. இதற்கு கோலார் பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடலினில் கொட்டினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, மீன்வளமும் பாதிக்கும் என்ற பேச்சு உள்ளது.

இந்நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 10-ல் மக்களிடம் கருத்து கேட்பு நடத்துகிறது. ஏற்கெனவே அணுமின் நிலையத்திற்கே கூடங்குளம் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அணுக்கழிவு மையம் என்ற பேச்சு அப்பகுதி மக்கள் மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com