சீமான்
சீமான்முகநூல்

”என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு..” - சம்மன் கிழித்த விவகாரம்; சீமான் காட்டம்!

”என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. 234 தொகுதிகளிலும் திமுகவால் தனித்துப்போட்டியிட முடியுமா?. ” - சீமான்
Published on

பாலியல் புகார் வழக்கில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெள்ளிக்கிழமை இன்று மாலை (பிப்ரவரி 28) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

முன்னதாக, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் வியாழக் கிழமையன்று சம்மன் ஒன்றை வளசரவாக்கம் போலீசார் ஒட்டினர். இதை அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கிழித்தெறிந்தார். இதுதொடர்பாக காவல்துறைக்குக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அமல்ராஜ், சுபாகர் ஆகியோரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக உள்ளதால் அவரைக் கைது செய்வதற்கு வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலையில் சீமானின் மனைவியும் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ” காவல் துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். நான்வெளியூரில் இருப்பது தெரிந்திருந்தும் என் வீட்டில் சம்மனை ஒட்டியுள்ளார். சம்மன் நான் படிக்கவா, நாட்டு மக்கள் படிக்கவா?; ஒரே நேரத்தில் 4 சம்மன்களை அனுப்புகிறார்கள். நான் ஒருவன்தானே?. அந்த பெண் பாலியல் புகார் கூறினால் குற்றமாகி விடுமா?.

சீமான்
" எடப்பாடி எப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறாரோ.."- டங்க் ஸ்லிப்பான திண்டுக்கல் சீனிவாசன்

என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. 234 தொகுதிகளிலும் திமுகவால் தனித்துப்போட்டியிட முடியுமா?. கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா என்பதை களத்தில் தனித்து நின்று பார்ப்போம். விருப்பமில்லாத பெண்ணை நான் வன்கொடுமை செய்ததுபோல் பேசுகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என்ன ஆனது?. எனக்கு வசதியான நேரத்தில்தான் ஆஜராக முடியும். காவல்துறை விரும்புகிறது . இன்று ஆஜராவேன். “ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com