நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்Pt web

காஞ்சிபுரம் | நாம் தமிழர் கட்சியின் மக்களின் மாநாடு., வெற்றிலைப் பாக்குடன் அழைப்பிதழ்.!

திருச்சியில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் நாம் தமிழர் கட்சியின் ’மக்களின் மாநாட்டில்’ பங்கேற்க வெற்றிலை, பாக்கு, பூ உள்ளிட்ட பொருட்களுடன் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
Published on

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் முதல் முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என இத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என கூறப்பட்டு வருகிறது. அதே சமயம், அனைத்து அரசியல் கட்சிகளும், பரப்புரை, பொதுக்கூட்டங்கள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் முழு மூச்சாக இறங்கியிருக்கின்றன.

நாம் தமிழர் கட்சி அழைப்பிதழ் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி அழைப்பிதழ் வழங்குதல்Pt web

இந்த நிலையில் தான், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்-21 ஆம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் “மக்களின் மாநாடு” எனும் தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. இதையடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில், காஞ்சிபுரம் திருகாளி மேடு பகுதியில் பொதுமக்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, சாக்லேட் உள்ளிட்ட பொருட்களுடன் மாநாட்டு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், காஞ்சிபுரம் தொகுதில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வெற்றிச் செல்விக்கும் வாக்களிக்க வேண்டியும் பொதுமக்களிடம் கேட்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றம்| ”மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்..” - பா.சிதம்பரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com