\
கஸ்தூரி கைது குறித்து சீமான்
கஸ்தூரி கைது குறித்து சீமான்pt

”சிறைப்படுத்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்துவிட்டார்”- கஸ்தூரி கைது குறித்து காட்டமாக பேசிய சீமான்!

தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியதாக கஸ்தூரி மீது வழக்குகள் பதியப்பட்ட நிலையில், நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
Published on

தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், ஐதராபாத்தின் கச்சிபௌலி என்கிற இடத்தில் நடிகை கஸ்தூரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருந்த கஸ்தூரியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தமிழ்நாடு காவல்துறை தேடிவந்த நிலையில், நேற்று மாலை அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

காயம்படவும் வேதனை படவும் ஒன்னுமில்லையே..

நேற்று ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்ட கஸ்தூரி இன்று சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் கஸ்தூரி கைது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரிpt web

அந்தவகையில் கஸ்தூரி கைது குறித்து பேசிய சீமான், ”கைது நடவடிக்கை அவசியமற்றது. அவர் கூறியதில் காயம்படுவதற்கும், வேதனை படுவதற்கும் ஒன்னுமேயில்லையே, திட்டமிட்டு வேண்டுமென்றே பழிவாங்கும் செயலாகவே இது இருக்கிறது.

அவர் பேசியதற்கு காயம்பட்டதாக சொல்றாங்க, ஆனால் 100 வருடமாக தமிழ் பேரினத்தை திராவிடர் திராவிடர் என கூறும்போது நாங்க எவ்ளோ காயம்பட்டிருப்போம். சிறைப்படுத்தும் அளவுக்கு அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்” என கேள்வி எழுப்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com