கள்ளக்குறிச்சி: உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சந்திக்க சென்ற சாட்டை துரைமுருகன் மீது தீடீர் தாக்குதல்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சிமுகநூல்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவோரை, சாட்டை துரைமுருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து, உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி - உயரும் விஷ சாராய உயிரிழப்புகள்; ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர்!

காரில் இருந்து இறங்கிச்சென்றபோது அங்கிருந்த ஒரு நபர், சாட்டை துரைமுருகனை திடீரென தாக்கி உள்ளார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து பாதுகாப்பாக அவரை காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com