நாதக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த த.பெ.தி.கழக நிர்வாகிகள்
நா.த.க நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்த த.பெ.தி.க-வினர்புதிய தலைமுறை

நீலாங்கரை: நாதக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த த.பெ.தி.கழக நிர்வாகிகள்... என்ன நடந்தது?

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளரின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு.
Published on

செய்தியாளர்: முருகேசன்

நேற்றைய தினம், கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருந்தார். அப்போது, பெரியாரை மேற்கோள்காட்டி அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகியிருக்கிறது.

சீமானின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “சீமான் தன் பேச்சுக்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும்” என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இன்று முற்றுகையிட முயன்றனர்.

“பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்?” - சீமான் கேள்வி
“பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்?” - சீமான் கேள்வி

அப்போது அந்த வழியாக நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் சசிகுமார் என்பவர் சீமான் வீட்டிற்கு செல்ல முயன்றார். இதைக்கண்ட அங்கிருந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், ‘முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றப் பார்க்கிறார் சசிகுமார்' எனல்கூறி அவரது கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட போலீசார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளை கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நாதக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த த.பெ.தி.கழக நிர்வாகிகள்
தனித்தீர்மானம் நிறைவேற்றம் முதல் செல்லூர் ராஜுவுக்கு சபாநாயகரின் பதில் வரை... சட்டமன்றத்தில் இன்று!

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், “பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் தவறானது. எந்த வகையிலும் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சீமான் தன் பேச்சுக்கான ஆதாரத்தை நிச்சயமாக வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

தந்தை பெரியார்
தந்தை பெரியார் கோப்புப்படம்

இதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, “தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தி அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இருப்பினும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் சசிகுமார், “சீமான் அவர்கள் தெரிவித்த கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும். அதை விடுத்து கார் கண்ணாடியெல்லாம் உடைப்பது எந்த வகையில் நியாயம்? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கார் கண்ணாடியை உடைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்” என்றார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் முற்றுகையை அடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com