pt desk
Seemanpt desk

“பாரதமாதா உயிரோடு இல்லை; இருந்திருந்தால்...” - சீமான் பேச்சு

“பாரதமாதா உயிரோடு இல்லை இருந்திருந்தால் பாரத மாதாவிற்கு ஜே என்று சொல்பவர்கள் அந்த பாரத மாதாவையும் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பார்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார்.
Published on

செய்தியாளர்: நீதியரசன் சாதிக்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்துள்ள அரிமளத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது...

“ ‘இந்த பிறப்பில் நீ படித்தால், அடுத்தப் பிறவியில் நாயாக பிறப்பாய்’ என்றெல்லாம் கூறி, சாஸ்திரங்களின் பெயரில் எங்களை படிக்க விடாமல் செய்தனர். அப்போது ‘அடுத்த ஜென்மத்தில் நீ என்னவாகவோ இரு... ஆனால் இப்போது படித்த மனிதனாக இரு’ என்று எங்கள் முன்னோர்கள் எங்களை படிக்க வைத்தனர். அதில் முக்கியமானவர்கள் ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜாவும், அயோத்திதாச பண்டிதர், காமராஜர், வ.உ.சி.யும் ஆகியோர். இவர்களோடு சேர்த்து இன்னும் எண்ணற்ற பெருமக்கள் இப்பட்டியலில் உள்ளனர். ஆனால் பெரியாரை மட்டுமே எல்லாவற்றுக்கும் கூறுகின்றனர்.

எல்லா வேதனைக்கும் பாஜக-காரர்களுக்கு ஒரே மருந்து, ராமர்தான். ஆனால் இப்போது யாராவது ஒரு பாஜக-காரராவது தற்போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்கிறார்களா? ஏனெனில் தற்போது ராமருக்கு மார்க்கெட் இல்லை. கோவிலை வைத்து வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். கோவில் கட்டி முடித்த பிறகு ராமருக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

ramar temple
ramar templept desk

ராமர் கோவில் இருக்கும் தொகுதியிலேயே அகிலேஷ் யாதவ் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை பொதுத் தொகுதியில் நிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி உள்ளார். கோவில் கட்டியவர் கோவிந்தா ஆகிவிட்டார். அதோடு ராமருக்கு மார்க்கெட்ட இல்லை. மார்க்கெட் இல்லாத நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘விலைவாசி உயர்வு ஏன் ஏற்பட்டுள்ளது’ என்ற கேள்விக்கு, ‘ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுவார். ‘பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதே’ என்று கேட்டால் ‘ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுவார்.

pt desk
ஜம்மு - காஷ்மீர் முதற்கட்டத் தேர்தல்: 58.85 சதவீத வாக்குகள் பதிவு!

அதேபோல உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் நீங்களும் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுங்கள். தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? ஜெய் ஸ்ரீராம் என பேப்பரில் எழுதிவிட்டு வாருங்கள்... தேர்ச்சி பெற்று விடலாம்.

ஜெய் ஸ்ரீராம், பாரத மாதாவிற்கு ஜே என சொல்கிறார்கள்... ஏதோ இவர்களின் மாதா போல சொல்கிறார்கள். பாரத மாதா என்ன உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று வன்புணர்வு செய்தவர்கள், மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவியை கூட்டு வன்புணர்வு செய்தவர்கள்... பற்றி கேட்டால்கூட, நீங்கள் பாரத மாதாவிற்கு ஜே என்று சொல்கிறீர்கள்.

L. Murugan
L. MuruganFile Photo

எட்டு வயது குழந்தை ஆசிபாவை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நீங்கள் பாரத மாதாவிற்கு ஜெ சொல்கின்றீர்கள். நல்லவேளை பாரதமாதா உயிரோடு இல்லை. அது ஒரு கற்பனை. இருந்திருந்தால் அந்த பாரத மாதாவையும் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பார்கள்” என்றார் காட்டமாக.

pt desk
“பெரியாரை தாண்டி பெரியாரை மீறி... அரசியல் செய்ய முடியாது” அமைச்சர் உதயநிதி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com