இனி வீட்டில் இருந்தே போலீசில் புகார் செய்யலாம்!

இனி வீட்டில் இருந்தே போலீசில் புகார் செய்யலாம்!

இனி வீட்டில் இருந்தே போலீசில் புகார் செய்யலாம்!
Published on

இணையதளம் மூலமாக காவல்துறைக்கு புகார் அனுப்பி அது தொடர்பான விவரங்களை பெற்று கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் காவல் சிறப்பு பிரிவுகள் வலைபின்னல் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் eservices.tnpolice.gov.in என்ற இணையம் மூலம் வீட்டில் இருந்தபடியே புகார்களை பதிவு செய்வது, முதல் தகவல் அறிக்கையை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது, வழக்குகளின் நிலையை அறிந்துகொள்வது உள்ளிட்ட சேவைகளை பெற முடியும்.

தமிழக போலீஸ் துறையின் மொபைல் ஆப்-ஐ play store மற்றும் TN Police Website -ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் வழங்கப்படும் இலவச இணையதள சேவைகளை அரசு ‘இ-சேவை’ மையங்களில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com