\

100 நாள் வேலை திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலை

100 நாள் வேலை திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலை
Published on: 

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்கும் கூடுதலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பினை வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதன் மூலம், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 23 லட்சம் கிராமப்புற தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையாக குட்டைகள், ஏரிகளை தூர்வாருதல் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com