HEADLINES |அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் அஜித்தின் பேட்டி வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் அஜித்தின் பேட்டி வரை விவரிக்கிறது.
அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம்... கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்படுவதால் நீக்கப்படுவதாக எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை...
ஓ.பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஒருங்கிணைந்ததற்கு தாம் காரணமில்லை என அண்ணாமலை விளக்கம்... அமித் ஷாவுக்கு கொடுத்த வாக்குறுதியால் அமைதி காப்பதாகவும் கருத்து...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி... 2 முறை அரசு நிறைவேற்றி அனுப்பிய தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கும் ஒப்புதல்...
சென்னை மறைமலை நகரில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு கார் நிறுவனம்.. 3,250 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து..
வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சுகாதார விதிகள் 2021 பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நெல் மூட்டைகளை கொண்டு செல்லும் லாரிகள் ஒப்பந்தத்தில் 165 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அன்புமணி குற்றச்சாட்டு... சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்...
காவல்துறையில் ஊடகங்களை சந்திப்பதற்காக புதிய பொறுப்பு உருவாக்கம்... ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி, ஊடக தொடர்பு அதிகாரியாக நியமனம்...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; அனைவருமே பொறுப்பு... கூட்டம் கூட்டுவதை விரும்புகிறார்கள் என்றும், அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் நடிகர் அஜித்குமார் பேட்டி...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி... 13ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது ஆஸ்திரேலிய அணி...
10 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட பாகுபலி... 2 பாகங்களை சுருக்கி ஒரே படமாக வெளியிட்ட படக்குழு...

