NOTA Vote Share Continues to Decline
NOTAweb

தொடர்ந்து சரிந்து வரும் நோட்டா வாக்குச் சதவீதம்.. மக்களிடம் குறையும் தாக்கம்!

நோட்டா அறிமுகம் முதல் வாக்குச் சதவீதம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதையடுத்து, மக்கள் அதிருப்தி வெளிப்பாட்டுக் கருவியாகும் அதன் தாக்கம் குறைகிறதா என்ற கேள்வி எழுகிறது.
Published on

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நோட்டா எனப்படும் யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்ற வாய்ப்புக்கு, மக்களிடம் பெரும் வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டுக்கு முன், எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், அதற்கான படிவம் 490ஐ நிரப்பி, தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது. ஆனால், ஓட்டுரிமை ரகசியம் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு நோட்டா என்ற பொத்தான் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு 0.75 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. நடந்து முடிந்த தேர்தலில், அது 0.41 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 801 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் ஆணைய புள்ளிவிபரப்படி, கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களிலும் நோட்டாவுக்கு ஓட்டு போடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு 1.08 சதவீதமாக இருந்த நோட்டா, 2024இல் 0.99 சதவீதமாக குறைந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com